நீங்கள் தேர்ந்தெடுக்கும் இதழ் உங்கள் ஆராய்ச்சிக்கான சரியான இதழ்த்தான் என்பதில் எப்படி உறுதியாக இருக்க முடியும்?

உங்கள் ஆராய்ச்சியை நம்பகமான இதழிற்கு சமர்ப்பிக்கிறீர்களா?
இது உங்கள் உழைப்பிற்க்கான சரியான இதழ்தான?
- உலகளாவிய ரீதியில் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வாரமும் புதிய பத்திரிகைகள் தொடங்கப்படுகின்றன.
- வெளியீட்டாளர் முறைகேடு மற்றும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
- வெளியிட தேர்ந்தெடுக்கும் போது நவீன வழிகாட்டலை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கலாம்.

நீங்கள் தேர்ந்தேடுத்த இதழ் நம்பகமானதா என அறிந்துகொள்ள, இந்த பட்டியலை சரிபார்க்கவும்.
நீங்கள் அல்லது உங்கள் சக பணியாளர் இந்த இதழை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
- இந்த இதழில் இதற்கு முன் கட்டுரையை படித்திருக்கிறீர்களா?
- இதழின் சமீபத்திய கட்டுரைகளைக் கண்டறிவது எளிதானதா?
வெளியீட்டாளரை எளிதில் அடையாளம் காணவும் தொடர்பு கொள்ளவும் முடியுமா?
- பத்திரிகை வலைத்தளத்தில் வெளியீட்டாளர் பெயர் தெளிவாக காட்டப்படுகிறதா?
- நீங்கள் வெளியீட்டாளரை தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் அஞ்சலில் தொடர்பு கொள்ள முடியுமா?
- மதிப்பாய்வு வகை பற்றி பத்திரிகை தெளிவுபடுத்துகிறது?
- நீங்கள் பயன்படுத்தும் சேவைகளில் குறியீட்டு செய்யப்பட்ட கட்டுரைகளா?
- என்ன கட்டணம் விதிக்கப்படும் என்பது தெளிவாக இருக்கிறதா?
- இதழின் வலைத்தளம் இந்த கட்டணங்கள் என்ன என்பதையும், அவை எப்போது விதிக்கப்படும் என்பதையும் விளக்குகிறதா?
ஆசிரியர் குழுவை நீங்கள் அடையாளம் காண்கிறீர்களா?
- ஆசிரியர் குழு உறுப்பினர்கள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா?
- ஆசிரியர் குழு தங்கள் சொந்த வலைத்தளங்களில் இதழை குறிப்பிடுகிறார்களா?
வெளியீட்டாளர் அங்கீகாரம் பெற்ற தொழில் முயற்சியில் உறுப்பினராக உள்ளாரா?
- அவர்கள் Committee on Publication Ethics (COPE) சேர்ந்தார்களா?
- திறந்த அணுகல் இதழ் என்றால், அது Directory of Open Access Journals (DOAJ) பட்டியலிடப்பட்டுள்ளது?
- திறந்த அணுகல் இதழ் என்றால், Open Access Scholarly Publishers’ Association (OASPA) சேர்ந்துள்ளார்களா?
- பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மத்திய அமெரிக்கா மற்றும் மங்கோலியாவில் வெளியிடப்பட்ட இதழ்கள், INASP-இன் பத்திரிகைகள் ஆன்லைன் தளத்தில் உள்ளதா அல்லது ஆப்பிரிக்க பத்திரிகைகள் African Journals Online (AJOL) மூலம் நடத்தப்படுகிறது?
- இதழ் வெளியீட்டாளர் வேறொரு வர்த்தக சங்கத்தின் உறுப்பினரா?

கீழ்க்காணும் பட்டியலில் உள்ள பெரும்பாலான அல்லது எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் ‘ஆம்’ என
பதில் சொல்ல முடியுமென்றால் உங்கள் கட்டுரையை சமர்ப்பிக்கவும்.
- உங்கள் நற்பெயரை, புகழை மற்றும் மேற்கோள்களைப் பெறும் வாய்ப்பை அதிகரிக்க உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இதழ் ஒரு பொருத்தமான சுயவிவரத்தைக் கொண்டிருக்கும் என நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும்.
- உங்கள் ஆராய்ச்சியை சரியான இதழில் வெளியிடுவதால் உங்கள் தொழில்முறை சுயவிவரத்தை உயர்த்தும், மேலும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
- உங்கள் கட்டுரையை குறியீடாக்க வேண்டும் அல்லது காப்பகப்படுத்தப்பட்டு எளிதில் கண்டறியும் முறையில் இருக்க வேண்டும் .
- உங்கள் கட்டுரை மதிப்பாய்வு செய்யப்பட்டு திருத்தப்படுவதில் ஒரு தொழில்முறை வெளியீட்டு அனுபவத்தை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்.
- இதற்கு பிறகு மட்டும் கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும்.
Many thanks to Sulthan for this translation.
This translation was published in October 2017.